கொரோனா எதிரொலி: வங்கி கடனை நிறுத்தி வைக்க கோரிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்துள்ள வாடகை கார் ஓட்டுநர்கள் மூன்று மாதத்திற்கு வங்கி கடனை நிறுத்தி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, வாடகை கார்கள், டாக்ஸிகள் உள்ளிட்டவைகள் இயங்காது. அத்தியாவசிய போக்குவரத்து, அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே திறந்திருக்கும்.