குறையும் வரி வசூல்: இலக்கைக் குறைக்கக் கோரிக்கை!

நடப்பு நிதியாண்டுக்கான வரி வருவாய் இலக்கை 1 லட்சம் கோடி வரையில் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வருமான வரித் துறை கோரிக்கை வைத்துள்ளது.


இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, நடப்பு 2019-20 நிதியாண்டில் வரி வருவாயாக ரூ.13.80 லட்சம் கோடி வசூல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. அதைத் தொடர்ந்த நாட்களில் வரி வருவாய் குறைந்து வந்ததால் ஜூலை மாதம் வெளியான பட்ஜெட் அறிக்கையில் வரி வருவாய் இலக்கு ரூ.13.35 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டது.