இலக்கு இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு மாதம் வசூலிக்கப்படும் வரி வருவாய் நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவாகவே இருந்து வருகிறது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் நேரடி வரி வருவாய் வெறும் 5 சதவீத வளர்ச்சியை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால், இக்காலத்தில் 17 சதவீத வளர்ச்சி இருந்திருக்க வேண்டும்.
அதேபோல, இந்த ஏழு மாதங்களில் ஜிஎஸ்டி வரி வருவாய் இலக்கு 15 சதவீதமாக இருந்த நிலையில், வரி வசூல் 12 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது. வரி செலுத்துவோரை ஊக்குவிக்க வரி தாக்கல் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் வரி வருவாய் மந்தமாக இருந்து வருவதாக வருமான வரித் துறை தரப்பில் கூறப்படுகிறது.