நவகிரகங்களை இப்படி வணங்கினால் பாவம் வரும்... சரியான முறை இதோ...

நவகிரகங்களை எப்படி வழிபட வேண்டும். நவகிரக வழிபாடு பலன்கள் மற்றும் அதற்கான பூஜை முறைகளை முறையாக அறிந்து செய்வது நல்லது. நாம் செய்யும் வழிபாடு நம்மை முன்னேற்ற இருக்க வேண்டும். நமக்கே அது கெடுதலாக இருக்கக் கூடாது. அந்த வகையில் நவகிரக வழிபாடு செய்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்..


பொதுவாக சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சி என கிரகப் பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் அதன் பலன் கூறும் ஜோதிடர்கள், அதற்கான பரிகார வழிபாடாக நவகிரக வழிபாடு செய்ய அறிவுறுத்துவது வழக்கம்.


 


அப்படி நாம் பரிகாரத்திற்கு அல்லது பொதுவாக நாம் நவகிரகத்தை வழிபாடு செய்வதற்கு முன் என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.


 


பொதுவாக எல்லா சிவ தலங்களிலும் நவகிரக சன்னிதி இருக்கும். அதுவும் கோயிலில் நுழையும் போது முதலில் வணங்கக் கூடிய முழுமுதல் கடவுள் விநாயகரின் சன்னதிக்கு அருகில் இருக்கும்.