நவாஸ் ஷெரீப் உடல்நிலை தேறவில்லை: லண்டன் சிகிச்சையில் மகன் அதிருப்தி

ஹைலைட்ஸ்





    • நவாஸ் ஷெரீப்புக்கு நோய் எதிர்ப்புத் சக்தி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

    • நாட்டு மக்கள் அவருக்காக பிரார்த்திக்க மகன் ஹூசைன் நவாஸ் வேண்டுகோள்.





 

மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என அவரது மகன் ஹூசைன் நவாஸ் கூறியிருக்கிறார்.

 

இஸ்லாமாபாத்தில் புதன்கிழமை பேட்டி அளித்த நவாஸ் ஷெரீப்பின் மகன் ஹூசைன் நவாஸ், “அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றத்துக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மக்கள் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு பலமுறை அவரிடம் கூறிவிட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

“ஒரே இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அப்படியில்லை. இன்னும் இரண்டு நாட்களுக்கு அவர் தங்குமிடத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டியிருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

“எலும்பு மஜ்ஜை சிகிச்சை மிகவும் சிக்கலானது. நாட்டு மக்கள் அவருக்காக பிரார்த்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” எனவும் ஹூசைன் வேண்டுகோள் விடுத்தார்